Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?…. ஸ்ட்ரைக்கால் வெளியாகும் அறிவிப்பு?!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் நேற்று 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பெருமளவு பேருந்துகள் இயங்காததால் நேற்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

நேற்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாவது திருப்புதல் தேர்வுகள் நடைபெறுகிறது. ஆனால் பொது வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த திருப்புதல் தேர்வுகளை ஒத்திவைத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்டம் இன்றும் (மார்ச்.29) தொடரும் என்பதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்து, மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு எழுத மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Categories

Tech |