Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து விரதமிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

இதனையடுத்து  அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரானை நடைபெற்றது. மேலும்   அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா  நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பூக்களால் அர்ச்சனை செய்து தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |