ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு விமான கட்டணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் மே மாதம் 24-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதாவது சமீகா பர்வீன்-நீளம் தாண்டுதல், சினேகா-நீச்சல், ஜெர்லின் அனிகா-இறகுபந்து தனிநபர், மணிகண்டன்-நீளம் தாண்டுதல், சுதன்- மும்முனை தாண்டுதல், பிரித்வி சேகர்-டென்னிஸ் தனிநபர் ஆகிய 6 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் கடந்த 22-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் பிரேசில் செல்ல விமான கட்டணத்திற்கு உதவி செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையின்படி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பிரேசில் செல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு விமான கட்டணம் ரூபாய் 30,000 வழங்குமாறு ஆணையிட்டுள்ளார். மேலும் தமிழக வீரர், வீராங்கனைகள் பிரேசில் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அவர்களுக்கு உதவி செல்லும் விதமாக வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.