சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், பெரியகுளம் வி. மாத்தூர் பாளையம் கிராமத்தில் செங்கல் சூளை இருக்கின்றது. இந்த செங்கல் சூளையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண்ணிற்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். அதேசமயம் அந்த செங்கல் சூளையில் புதுச்சேரி மாநிலம் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த கதிர்வேல் என்பவருடைய மகன் 45 வயதான கோபி என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த 13 வயது சிறுமிக்கு கோபி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமி தாயாரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் கோபி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.