Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் எங்களின் நோக்கம் இது இல்லை…. ஜெர்மன் பிரதமர் பகிரங்க பேச்சு….!!!

ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை அமைப்பது ஜோ பைடனின் எண்ணமில்லை என்று ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோட்டாவோ அல்லது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனோ ரஷ்ய ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமில்லை என்று ஜெர்மனி  பிரதமர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நேற்று முந்தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “புதின் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை  மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர் . அதில் “புதினின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உண்மையில் அழைப்பு விடுக்கவில்லை” என்று  கூறினர்.

மேலும் இது தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறுகையில். “புதினின் ஆட்சியை கவிழ்ப்பது நோட்டா, அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஆட்சி மாற்றம் எங்கள் நோக்கம் இல்லை என்று நாங்கள் இருவரும் முழுமையாக ஒத்துகொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |