தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவிப்பது ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையில் ஆசிரியர்கள் தங்களது கடமை புரிந்து பணிபுரிய வேண்டும் எனவும், பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து ஆர்வமாக கல்வி கற்பதற்கு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும். மேலும் நமது மாவட்டமானது கல்வியில் சிறந்த மாவட்டமாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணிபுரிந்து வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.