Categories
உலகசெய்திகள்

பல மாதங்களை சம்பளம் தரல…. மூடப்பட்ட ஆப்கான் தூதரகங்கள்…. அமெரிக்காவின் அதிரடி முடிவு….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜனநாயக அரசை அகற்றிவிட்டு தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு நியமிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயக அரசை முழுவதுமாக அகற்றிவிட்டு தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு  நியமிக்கப்பட்டது.  இந்த புதிய அரசை உலக நாடுகள் எதுவும் ஏற்கவில்லை.  மேலும் ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து வரும் நிதியை நிறுத்தியதோடு வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் நிதி பற்றாக்குறையால் இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.  எனவே நிதி பற்றாக்குறை காரணத்தினால் அமெரிக்கா நாட்டில் உள்ள தூதரகத்தை மூடப் போவதாக தலிபான் அரசுக்கு கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களிலுள்ள ஆப்கானிஸ்தான் துணைத் தூதரகங்கள் நேற்று மூடப்பட்டது.  மேலும் ஆப்கானிஸ்தான் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

Categories

Tech |