நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணுமின் நிலையங்கள் அமைக்கும் பணி கூடிய விரைவில் தொடங்கப்பட்ட இருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 200 மெகாவாட் மின்திறன் உள்ள 10 அணுமின் நிலையங்கள் அடுத்த ஆண்டில் அமைக்கப்பட உள்ளது. நாட்டில் மின்சார தேவைக்காக பல இடங்களில் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நாட்டின் முதல் மின் நிலையம் கடந்த 1960 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ரவாத்பாதாமில் அமைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒப்பந்தங்கள் வாயிலாக 22 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் 10 மின் நிலையங்களை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட உள்ளது. இதற்கான கொள்முதல் பணிகளை சுலபமாக்கும் வகையில் இவற்றுக்கான ஒப்புதலை மத்திய அரசு ஒரே நேரத்தில் அளித்துள்ளது.
இதற்கான விவரங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பார்லிமென்ட் நிலைக் குழுவின் கூட்டத்தில் அணுசக்தி துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது கர்நாடகா மாநிலம் கைகாவில் 700 மெகாவாட் திறனுள்ள 2 அணு மின் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது. இதனையடுத்து ஹரியானா மாநிலம் கோரக்பூரில் 2 அலகுகள் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் மகிபன்ஸ்வராவில் 4 அலகுக்கான பணிகள் தொடங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் சுட்காபில் 2 அலகுக்கான பணிகள் தொடங்கப்படுகிறது. இந்த அணுமின் நிலையங்கள் 1.05 லட்ச கோடி ரூபாயில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.