தகுதிச்சான்று மற்றும் ஆவணங்கள், வாகன வரி கட்டாமால் இயக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அதில் தகுதிச்சான்று மற்றும் அதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட லாரிகள் உள்ளிட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வால்பாறை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், “தகுதிச் சான்று மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட லாரிகள் ,வாகன வரி கட்டாத வாகனங்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் வரி வசூலிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.