Categories
உலக செய்திகள்

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால்…. தக்க பதிலடி கொடுப்போம்…. ரஷ்யாவை எச்சரிக்கும் நேட்டோ…!!!

நேட்டோ அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான போரை மேற்கொண்டிருக்கும் ரஷ்யா ஒருபோதும் வெல்லாது என்று தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை தொடர்ந்து நேட்டோ அமைப்பினுடைய துணை பொதுச் செயலாளரான மிர்சியா ஜியோனா தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் கொண்டிருக்கும் ரஷ்யா ஒரு போதும் வெல்ல முடியாது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ரசாயனம் அல்லது அணுசக்தி தாக்குதலை மேற்கொண்டால் நேட்டோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நேட்டோ அமைப்பு என்பது தற்காப்பு மற்றும் அணுசக்தி கூட்டணியாக இருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டில் ரசாயன ஆயுதங்களை அல்லது மற்ற வகையிலான அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி போர் தொடுத்தால் அது உக்ரைன் நாட்டிற்கு எதிராக ரஷ்ய அதிபர் மேற்கொள்ளும் போரின் தன்மையை மாற்றிவிடும். நேட்டோ அதற்கு பதில் தர தயாராக இருக்கிறது என்பதை நான் உறுதியாக கூறமுடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |