சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஜெசிகா சாஸ்டைன் வென்றுள்ளார்.
94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜெசிகா சாஸ்டைன் பெற்றுள்ளார். “தி ஐஸ் ஆஃப் டேமி ஃபாயே” திரைப்படத்திற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார் இதுவரை மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், தற்போது தனது முதல் விருதை வென்றுள்ளார். இந்த படத்திற்கு சிறந்த மேக்கப் விருதும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க்கது.