Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணிக்கான காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்களும்‌ வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இதுவரை மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளில் சேராமல் இருக்கின்றனர். எனவே பணியிட மாறுதல்களை பெற்ற ஆசிரியர் உடனடியாக பள்ளிகளில் பணிபுரிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணி மாறுதல் செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து வேலை செய்யும் பள்ளியில் பணிபுரிந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Categories

Tech |