Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 2 முதல்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தும், பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET) மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி தேசிய தேர்வு முகமை இந்த தேர்வினை நடத்தும் என தெரிவிக்கப்பட்டது. ஆகவே இனி இந்த தேர்வு மூலமாகவே, நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கையானது  நடைபெற உள்ளது.

இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு வரும் ஏப்ரல் 2 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் இத்தேர்வினை எழுத விரும்பும் மாணவர்கள் https://cute. samarth.ac. in/ என்ற இணைய முகவரியில் சென்று ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இத்தேர்வு  தமிழ், மலையாளம் உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. மேலும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இத்தேர்வு நடைபெறலாம் எனவும் மேலும் தகவல்களுக்கு cute-ug@nta. ac. in  (அ) 011-40759000,011-69227700 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |