இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இலுப்பக்குடி கிராமத்தில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு அழகப்பா அரசு கலை கல்லூரியின் முதல்வர் லட்சுமி தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து இலுப்பக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார்.
இந்நிலையில் இலுப்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். மேலும் இந்த முகாமில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த கொதிப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தராஜ், டாக்டர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் விஜய் தாமரை ஆகியோர் கலந்து கொண்டனர்.