Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய விமான சேவை…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரானா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரானா பரவல் குறைந்ததையடுத்து விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை தொடங்கியது. ஆனால் போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி பயணிகளின் பாதி செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று கூறி விமான சேவையை மீண்டும் புதுச்சேரியில் தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி கடந்த 2017-ஆம் ஆண்டு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு பெங்களூருக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஹைதராபாத்திற்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்த விமான சேவையை தொடங்குவதற்காக கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறையின் அமைச்சரின் வலியுறுத்தல் காரணமாக மீண்டும் விமான சேவைகள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் மதியம் 12.05 ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு 1.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தது. இந்த விமானத்தை வரவேற்கும் விதமாக தீயணைப்பு துறையினர் விமானத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் விமானத்தில் வந்த புதுச்சேரி கவர்னர் மற்றும் பயணிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Categories

Tech |