Categories
தேசிய செய்திகள்

செல்லமாக வளர்த்த தாயை உலக்கையால் தாக்கி கொன்ற மகன்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்பால் என்ற மாவட்டத்தில் உள்ள  ஷெரிப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் என்ற வாலிபர். இவர் தனது இடைநிலை படிப்பை முடித்துவிட்டு, கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருக்க, இவரது தாயார் விவசாய வேலை செய்து வருகிறார். மேலும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அவரது தாயார் மகேஷ் உட்பட 2 மகன்களையும் மற்றும் குடும்பத்தையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் பல நாட்களாக மகேஷ் தனக்கு மொபைல் போன் வாங்கித் தருமாறு அவரது தாயிடம்  கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, அவரது தாயார் அதை வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் சம்பவத்தன்று வீட்டில் தகராறு ஏற்பட்டு, சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த மகேஷ், தனது தாய் என்று கூட பாராமல், அருகிலிருந்த உலக்கையை எடுத்து அவரது தாயை தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலால் அவரது தாயார் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இந்த சத்தத்தை கேட்டு விரைந்து வந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால்  கடுமையான இரத்தப்போக்கு காரணமாக அவரது தாயார் உயிரிழந்துள்ளார். எனவே இதுகுறித்து அம்மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |