லண்டனில் பேருந்து ஓட்டுநர்கள் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதால் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் கடும் பாதிப்படையும் என்று கூறப்பட்டிருக்கிறது.
லண்டனில் இருக்கும் அரிவா நிறுவனத்தில் பணிபுரியும் பேருந்து ஓட்டுநர்கள், சம்பள உயர்வுக்காக வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பேருந்து சேவையை நடத்தும் அரிவா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் அதிகமாக கொடுக்க முன்வந்திருக்கிறது.
எனவே, தற்காலிகமாக போராட்டம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்நிறுவனம் வழங்குவதாகக் கூறிய 1.5% சம்பள உயர்வு குறித்து பேருந்து ஓட்டுனர்கள் வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறார்கள். மேலும், பெரும்பாலான பணியாளர்கள் இந்த சம்பளத்திற்கு ஒத்து வரவில்லை. எனவே, திட்டமிட்டவாறு 2 நாட்களுக்கு வேலை நிறுத்தம் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
பேருந்து ஓட்டுனர்கள் திடீரென்று வேலை நிறுத்தம் செய்வதால், குரோய்டன், தோர்ன்டன் ஹீத், நோர்வூட் போன்ற இடங்களில் இருக்கும் வழித்தடங்கள் அதிக பாதிக்கப்படையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.