வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பொட்டல் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக பாண்டி பல்வேறு இடங்களில் பெண் பார்த்துள்ளார். ஆனால் செல்லப்பாண்டிக்கு ஏற்ற வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பாண்டி தங்க நகைகளை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் அவலத்தை மதுவில் கலந்து குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக செல்லப்பாண்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லப்பாண்டி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.