இன்று (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக சிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ்.தோனி திடீரென பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டனாக ஜடேஜாவை சி.எஸ்.கே அணி நியமித்தது. இன்று முதல் தோனி கேப்டனாக இல்லாத சிஎஸ்கேவை ரசிகர்கள் பார்க்க உள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், “வம்சம்” என்ற கேப்ஷன் போட்டு தோனியும், வீரர்களும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனான பாப் டூ பிளஸ்ஸிஸ் தோனியுடன் இருக்கிறார். இவர் சென்னை அணியில் பத்து வருட காலம் பயணித்தவர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்துள்ளனர். தோனி எப்படியெல்லாம் இருந்தார். இப்போது தோனி இல்லாமல் சிஎஸ்கே அணியைப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.