Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடிக்கால் பகுதியில் முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

இதனை அடுத்து சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக தொட்டியம் சந்தப்பேட்டை பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 100 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து தரையில் ஊற்றி அழித்துவிட்டனர்.

Categories

Tech |