Categories
சினிமா

“ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்”… இணையத்தில் போட்டோக்கள் வைரல்…!!!

துபாய்க்கு சுற்றுப்பயணம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ளார். நேற்று துபாயில் நடந்த உலக கண்காட்சியில் இந்திய அரங்கில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட தமிழ்நாட்டு பாரம்பரிய நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு அங்கு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் முதல்வர் துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் ஸ்டுடியோவிற்கு சென்று பார்வையிட்டார். இது குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிட சென்ற என்னை, நண்பர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து தான் தயாரித்த “மூப்பில்லா தமிழே தாயே” என்ற ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகின் எல்லையே இல்லை என அதில் கூறியுள்ளார்.

 

Categories

Tech |