Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணத்தை வாங்கி கொடுங்க…. தீக்குளிக்க முயன்ற விவசாய சங்க செயலாளர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  விவசாய சங்க செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டனம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசேகரன். இவர் விவசாய சங்க செயலாளராக இருக்கிறார். இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் ஞானசேகரனிடம்  விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ஞானசேகரன் கூறியது, நான் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்றேன்.கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குவதற்கு அலுவலர் ரூ.30 ஆயிரம் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு வீட்டின் கட்டுமான பணியை முடித்து விட்டேன்.

ஆனால் கட்டியதற்கான தொகை வழங்கப்படவில்லை.இதனை பற்றி உயர்அதிகாரிகளிடம் கேட்டதற்கு இன்னும் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் வீடு கட்டுவதற்கான தொகை கிடைக்கும் என்று கூறினார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம்  விசாரணை நடத்தி வீடு கட்டியதற்கான தொகையை எனக்கு வாங்கி தர வேண்டும். மேலும் என்னிடம் லஞ்சம் பெற்ற அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |