Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நில அதிர்வு ஏற்பட்டதா….? அலறியடித்து ஓடி வந்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் விசாரணை…!!

பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு ஓடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொன்ரங்கி கீரனூர் கிராமத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த கிராமத்தில் இருக்கும் பல வீடுகளில் நில அதிர்வு காரணமாக மேற்கூரை ஓடுகள் உடைந்து விழுந்தது. இதனை அடுத்து கிராம மக்கள் அச்சத்தில் விடிய விடிய தூங்காமல் தெருவில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி ஆர்.டி.ஓ சிவகுமார், தாசில்தார் முத்துசாமி, காவல்துறையினர் ஆகியோர் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் சேதமடைந்த வீடுகளின் மேற்கூரைகள், சுவரில் ஏற்பட்ட விரிசல்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்நிலையில் கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டதா? அல்லது குவாரியில் பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |