Categories
சினிமா

“மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா”…. இது என்னப்பா புதுசா…!!!

இயக்குனர் ஐஸ்வர்யா தன் மூத்த மகனான யாத்ராவை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறாராம்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற ஜனவரி மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகன்கள் ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வருகின்றனர். மூத்த மகன் யாத்ராவிற்கு 15 வயது ஆகியுள்ள நிலையில் அவரை ஹீரோவாக வைத்து இயக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ஆசைப்படுகிறாராம்.

ராகவா லாரன்ஸின் துர்கா படப்பிடிப்பை முடித்துவிட்டு யாத்ராவை வைத்து இயக்க இருக்கிறாராம் ஐஸ்வர்யா. ஆனால் ஐஸ்வர்யா தற்போது 2 ஹாலிவுட் படங்களை இயக்க ஒப்புக் கொண்ட நிலையில் யாத்ராவை வைத்து படம் இயக்குகிறார் என்பதை நம்புவதற்கு அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் மட்டுமே முடியும்.

Categories

Tech |