Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் பார்க்கணும்…. மாநிலங்களவையில் “பாகுபலி படம்”…. வெளியான அதிரடி முடிவு…!!!!!

பன்மொழி சமுதாயத்தை மேம்படுத்துவதற்காக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பாகுபலி படம் திரையிடப்பட உள்ளது.

இந்தி மற்றும் பிற மொழி பேசும் மக்களிடம் மொழி பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக ராஜ்ய சபையின் இந்தி சலாஹ்கர் சமிதி ஒரு பரிந்துரை செய்தது. அதாவது பன்மொழி சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ராஜ்ய சபை உறுப்பினர்களுக்கு பாகுபலி படம் திரையிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பை ராஜ்யசபா திரையிட முடிவு செய்துள்ளது.

இந்த திரைப்படத்தை ராஜ்ய சபையின் அனைத்து உறுப்பினர்களும் பார்க்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜ்யசபை உறுப்பினர்களின் புரிதலுக்காக படத்தின் கீழே ஆங்கில மொழியில் சப்-டைட்டில் தோன்றும். மேலும் தென் இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி பிலிம்ஸ் டிவிஷன் ஆடிட்டோரியத்தில் மாநிலங்களவை செயலக பொழுதுபோக்கு திரையிட உள்ளது.

Categories

Tech |