புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சிராஜூதீன், ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள், வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பாரம்பரிய உணவுகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.