Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (19.01.2020) எப்படி இருக்கு?

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று பொது நல  சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி இஷ்ட தெய்வ அருளால் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். எதிர்பார்த்த சுபசெய்திகள் வந்து சேரும். இன்று எளிதில் மறறொருவருடன் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு இருக்கும். குடும்பம் தொடர்பான கவலைகள் கொஞ்சம் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மனதில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும் இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். இன்று போட்டிகளை சமாளிக்கக் கூடிய கவனம் கொஞ்சம் இருக்கும். சமாளிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப  நல்ல படியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்:   1 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு

ரிஷபம் 

ரிஷப ராசி அன்பர்களே…!!!!  இன்று உங்களுக்கு  தொடர்பு இல்லாத பணி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும். செயல்களில் முன் யோசனை அவசியம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பர்கள் உதவிகளை  செய்வார்கள். கூடுதல் செலவுகள் கொஞ்சம்  ஏற்படலாம். பெண்கள் நகையை இரவில் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.

இன்று  ஏகப்பட்ட போட்டிகள் உங்களுக்கு  இருக்கும் போட்டிகளை சமாளிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அவசரப்படாமல் நிதானமாக காரியங்களை மட்டும் செய்யுங்கள், அது போதும். மனதில் அமைதி இருக்கும் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் கௌரவம் கூடும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போது மட்டும் கவனமாக இருங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி உங்களுடைய காரியங்களை அப்படியே செய்யுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை மற்றும் இளமஞ்சள்

மிதுனம் 

மிதுன ராசி அன்பர்களே…!!!! இன்று பணிகள் நிறைவேற தாமதம் ஏற்படலாம். அனுபவசாலிகளின் ஆலோசனை நம்பிக்கையை  கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருக்கின்ற அனுகூலத்தை காத்திருப்பீர்கள்.  அளவான வகையில் பணவரவு இருக்கும். ஆரோக்கியம் அறிந்து விருந்தில் பங்கேற்க கூடும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டுவிட்டு, வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது, முன்னேற்றத்திற்கு உதவும். பணவரவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள்   துணிச்சலாக சில வேளைகளை செய்து உச்சி பெறுவார்கள். பெண்களின் வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.  உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது, வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது சிறப்பு.  கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சூரிய பகவான் வழிபாட்டையும்,  சிவபெருமான் வழிபாட்டையும்  மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியம் நல்ல படியாக நடக்கும்.

 அதிர்ஷ்ட திசை: வடக்கு

 அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு மற்றும் இளம் பச்சை

கடகம் 

கடக ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டிர்கள்.  தொழில்  வியாபாரத்தில், உற்பத்தி விற்பனை ரொம்ப சிறப்பாக இருக்கும். தாராள பண வரவில் சேமிப்பு சேர்ப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். இன்று கொடுக்கல் வாங்கல்களில் கவனம் இருக்கட்டும் அதிகம் பேசுவதை தவிர்த்து, செயல்களில் வேகம் காட்டுவது நல்லது.

அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அதைப்பற்றி ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது.இன்று  முன்னேற்றம்  அடைவதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், கவனமாக செயல்படுவீர்கள் புதியவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறலாம்.  மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் ஒருசேர வணங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் சிறப்பான அனுபவத்தை இன்று  நீங்கள் பெற முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு

சிம்மம் 

 சிம்ம ராசி அன்பர்களே….!!!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக  பேசுபவரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில்  வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும்.  பிள்ளைகள் வெகுநாள் கேட்ட பொருளை இன்று  வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று  கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.

வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும்.  பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், அதனால் நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் வேலைப்பழு காரணமாக அலைய  வேண்டியிருக்கும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் உங்களுடைய காரியங்கள் அனைத்துமே நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான  திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு

கன்னி 

 கன்னி ராசி அன்பர்களே….!!! இன்று எதார்த்த பேச்சு சிலர் மனதை கொஞ்சம் பாதிக்கலாம், பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடுகள் அவசியம். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளையும் சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை  பின்பற்றவும். இன்று  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைகாக பாடுபடுவீர்கள்.
அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது, அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள், பெண்களுக்கு எதிலும் மெத்தனமான போக்கு இன்று காணப்படும்.  வீண் அலைச்சல்களும் இருக்கும், கோபத்தை குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மையை கொடுக்கும்.
இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும் அது மட்டுமில்லாமல் சூரிய பகவான் வழிபாட்டையும்,  சிவபெருமான் வழிபாட்டையும் ஒருசேர வணங்குங்கள்.  உங்களுக்கான காரியம் அனைத்துமே சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
 அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை
துலாம் 

துலாம் ராசி அன்பர்களே…..

இன்றைய   நிகழ்வுகளால் அதிருப்தி கொள்வீர்கள்.நிறுவிய  பணி துரிதமாக செயல்பட வைக்கும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்  செலவு கொஞ்சம் கூடும் ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை கேட்பதால் மனம் கொஞ்சம் மகிழ்வாக இருக்கும். இன்று வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும் .

அடுத்தவர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் .எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை கொடுக்கும். இன்று எந்த ஒரு பிரச்சினையையும் சமாளிக்கும் திறமை கூடும் .உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம் .

இன்று  நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு ஆபத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒருசேர வணங்குங்கள் .உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை          :             தெற்கு

அதிர்ஷ்டமான எண்             :             2 மற்றும் 9

அதிர்ஷ்டமனா  நிறம்           :             நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

விருச்சிகம் 

விருச்சிகம் ராசி அன்பர்களே…

இன்று உங்களுடைய அணுகுமுறையில் நல்ல மாற்றம் ஏற்படும் விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவார்கள் தொழில் வியாபாரம் செழித்து புதிய நிலை உருவாகும்.

இன்று நிலுவைப்பணம் வசூலாகும். விருது விழாவில் பங்கேற்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும் மருந்து ரசாயனம் போன்ற தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் பொழுது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றி உண்டாகும் .வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும்.

கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று பிள்ளைகளுக்காக நீங்கள் கடுமையாக பாடுபடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் .வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை  கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒரு சேர வழிபட்டால் உங்கள் காரியங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை      ;           தெற்கு.

அதிர்ஷ்டமான எண்          ;           4 மற்றும் 5.

அதிர்ஷ்டமான  நிறம்         ;            ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

தனுசு 

தனுசு ராசி அன்பர்களே..!!!

இன்று சுற்றுப்புறச் சூழல் தொந்தரவு கொஞ்சம் கொடுக்கலாம். பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர் உதவிகரமாக இருப்பார்கள் தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும்.

இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள்  இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம்.

இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் எந்தவித விமர்சனமும் செய்யாமலிருப்பது நல்லது. இன்று கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும் உங்களது செயல்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும்  இருக்கும்.

இன்று சுதந்திரமான எண்ணம்  ஏற்படும் .உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .இன்று  நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று   சூரிய பகவான்  வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒருசேர வணங்குங்கள் உங்களுடைய காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும் 

அதிர்ஷ்டமான திசை    :      கிழக்கு

அதிர்ஷ்டமான எண்        :       4 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம்      :      மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மகரம் 

மகரம் மகரம் ராசி அன்பர்கள்,

இன்று உங்களுடைய தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலம் பலம் பெறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டாகும்.  இன்று பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை தாமதபட்டு  வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல்கள் உங்களுக்கு டென்ஷனை கொடுப்பதாக இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வதும் அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது ரொம்ப நல்லதுங்க. பயணம் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதியவர்களின்  நட்பு கிடைக்கும். இன்று ஆதாயம் உங்களுக்கு சிறப்பாகத்தான் வந்து சேரும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அது  உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒரு சேர வணங்குங்கள், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்;  9  மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்:  இளம் சிவப்பு  மற்றும் மஞ்சள் நிறம்

கும்பம் 

கும்பம் ராசி அன்பர்கள்,

இன்று  நிகழ்வுகள் மாறுபட்டதாக இருக்கும். நல்ல வரையும் தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நலம் சீராகும். இன்று கோபத்தை கட்டுபடுத்துவதும் வீண் விவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுங்கள்  சிறப்பாக இருக்கும்.

இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்  நன்மையை கொடுக்கும். இன்று மிகவும் பொறுமையுடனும் நிதானமாகவும் இருப்பது  அவசியம்.  நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தயவு செய்து மற்றவர்களிடம்  பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் இந்த விஷயத்துல ரொம்ப கவனமாக இருங்கள். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் மேற்கொள்ளும் பொழுது தீர ஆலோசனை செய்து  மேற்கொள்ளுங்கள்ஹால் பெரியோரிடம் சற்று ஆலோசனை கேட்பது ஒன்றும் தவறு இல்லை.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்கருநீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒரு சேர வணங்குங்கள், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்;  2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

மீனம் 

மீன ராசி அன்பர்கள்,

இன்று நண்பரிடம் கேட்ட  உதவி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.  நித்திரையில் இனிய கனவுகள் வரும்.  எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். அடுத்தவர்களின் செயல்கள் உங்களுக்கு கோபத்தை கொஞ்சம் ஏற்படுத்தலாம் எனவே நிதானமாக செயல்படுவது ரொம்ப நல்லது.

சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன சின்ன விஷயங்களால் மன நிறைவு அடைவீர்கள். இன்று எதிர்பார்த்து எதிர்பாலினத்தாரிடம்  பழகும் பொழுது கவனமாக பழகுங்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். இன்று உடல் நிலையை  பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. வாகனம் வாங்க கூடிய யோகம் இன்று இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒரு சேர வணங்குங்கள், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்;  4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்:  நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

Categories

Tech |