தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்தல் செய்வதற்கு 9:30மணிக்கும், துணைத்தலைவர்களுக்கான தேர்தல் பிற்பகல் 2:30 மணிக்கும் நடக்க உள்ளது.