Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள கோதை கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான குழு அங்கு சென்றது. அந்தப் பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் முன்பாக 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை காவல்துறையினர் அழைத்தனர். அப்போது ஒரு வாலிபர் மட்டும் தப்பித்து சென்றுள்ளார். இதனையடுத்து மற்ற 4 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த மகேஷ், ஸ்ரீவாசன், ரங்கநாதன், சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் 1 1/2 கிலோ கஞ்சா இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |