Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புவனா வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அவரை தாக்கி 14 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து புவனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |