ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகிய நிலையில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது.
இந்திய திரையுலகில் பிரபல இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படமானது நேற்று முதல் திரைக்கு வந்து இருக்கின்றது. இதுவரையில் படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களையே தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் ஒரே ஒரு குறை மட்டும் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றனர். அது என்னவென்றால் படத்தின் கதை கருவானது இதற்கு முன் நாம் பலமுறை பார்த்து பழகியதாம். இருப்பினும் அந்த குறை தெரியாமல் நடிகர்களின் அசாத்திய நடிப்பு படத்தின் மேக்கிங் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால் இந்த படத்தின் முதல் நாள் வசூல் பல கோடிகளை தாண்டும் என கூறிவருகின்றனர் குறிப்பிடத்தக்கது.