கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியாபுரம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரில் ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.