Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…! 25 ஆண்டுகளுக்கு பின்…. இந்தியா திரும்ப முயற்சித்தவர் திடீர் தற்கொலை…!!!!

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்ப முயச்சி செய்த நபர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் 25 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் நஜ்ரானில் வேலை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் விசா காலாவதியான நிலையில் அவரால் சொந்த நாடு திரும்ப முடியவில்லை.  இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளாக சொந்த ஊருக்கு திரும்புவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும் அவர் நஜ்ரானில் உள்ள இந்தியன் சோஷியல் மீடியா மூலம் தனது பிரச்சினையை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனை பார்த்தவர்கள் அவரை வீட்டிற்கு செல்ல வாய்ப்பு அளித்தனர்.

இந்தநிலையில் முருகேசன்  இந்தியா செல்வதற்கு முன்தினம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சவுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடல் சவுதி அரேபியாவில் அடக்கம் செய்ய பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |