Categories
உலக செய்திகள்

பராகுவேயில் கன மழை…..வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் பலி….பெரும் சோகம்…!!!

பராகுவேயில் கொட்டி தீர்த்த கன மழையால், வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்று,  பராகுவே என்ற நாடு. இந்நாட்டில் கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைவிடாமல் 24 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் ஆறுகள் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதிலும் குறிப்பாக தலைநகர் அசன்சியானை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து குடியிருப்புகளை எல்லாம் வெள்ளம் சூழ்ந்ததால் சான் லோரென்ஸோ என்ற நகரமே தனி தீவாக காட்சியளித்தது. மேலும் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக பராகுவே மீட்பு படையினர் கூறியுள்ளனர். தற்போது மழை சற்று குறைந்துள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுவதாகவும் மற்றும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |