வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி சத்திரம் வீதி, பவானிசாகர் ரோடு, மாதம்பாளையம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான 126 கடைகள் அமைந்துள்ளது. இதில் பல மாதங்களாக 67 கடைகளின் உரிமையாளர்கள் 11 லட்சம் ரூபாய் வரை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை. இதனால் நகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.