Categories
உலக செய்திகள்

தடை செய்யப்பட்ட ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா…. தென்கொரியா கண்டனம்…!!!

வடகொரியா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய தடைசெய்யப்பட்ட ஏவுகணையை பரிசோதனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு புதிதாக மற்றும் அதி சக்தி வாய்ந்த ஒரு ஏவுகணையை இன்று வடகொரியா சோதனை செய்திருக்கிறது.

இது குறித்து ஜப்பான் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்ததாவது, அந்த ஏவுகணையானது சுமார் 1,100 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 6 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திற்கும் பறந்திருக்கிறது. அதன் பின்பு ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக கூறியிருக்கிறார்கள். மேலும், இந்த ஏவுகணை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லக்கூடியது. அமெரிக்காவையும் அழிக்கக் கூடிய திறன் பெற்றது. தென்கொரிய அதிபர், இந்த சோதனை ஐ.நா விதிகளை மீறக்கூடிய செயல் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |