ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அறிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் நேற்று கூறியுள்ளார். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலனை செய்ய கூடாது என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, பதிலளித்த ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்திய ரயில்வே துறையின் திறமையான செயல்பாட்டை எளிதாக்குவதற்கு அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், சிக்னல் அமைப்பு, ரயில் பெட்டிகள் என அனைத்தும் இந்திய அரசுக்கு சொந்தமானது. ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.