Categories
அரசியல்

”நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” திருநாவுக்கரசர் கருத்து ….!!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையாகத் தான் உள்ளது என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தற்போது திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் சுமுகமான பேச்சு வார்த்தைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருந்தது. இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். காங்கிரஸ் தலைவர்களும் திமுக தலைவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு ஏதுமில்லை ‘ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு கட்சிகளிலும் கொடுத்த அறிக்கைகளை ஆராய்ச்சி செய்வதற்கு அவசியமில்லை. எங்களிடையே அனைத்தும் சுமுகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. பெரியார் பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். நான் கருத்துக் கூற விரும்பவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |