Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழக அரசின் சாதனைகள்…. மக்களுக்கு உணர்த்தும் புகைப்பட கண்காட்சி….!!

தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து  கொள்ள புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் வைடப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள்  தெரிந்து கொள்ள  செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்பட கண்காட்சி நடைபெற்றுள்ளது.

இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், அதாவது  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதிஉதவி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், தனியார் மருத்துவமனையில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல் போன்ற திட்டங்கள் பற்றி பொதுமக்கள் தெரிந்து  கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.

அதே போல் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித்திட்டம், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் புகைப்படகண்காட்சியில்  இடம்பெற்றிருந்தன.  இந்த புகைப்பட கண்காட்சியை வைடப்பாக்கம் ஊராட்சி மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

 

 

 

Categories

Tech |