Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் மார்ச் 29 ஆம் தேதி…. 6 மணி நேரம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 29ஆம் தேதி 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 29ஆம் தேதி காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவை நடைபெறும். பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். இதில் அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டு மூலிகை பொருட்களால்  தயார் ஆன கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும். இதையடுத்து 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |