ஆர்சிபி கேப்டன் பதவி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ரவிசந்திரன் அஸ்வின், “சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனியின் சாயல் இருப்பதாலும், ஐபிஎலில் நிறைய அனுபவங்கள் உள்ளதாலும் டூ பிளஸியால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். கேப்டனாக டூ பிளஸியை தேர்வு செய்தது சிறந்தது. இருப்பினும் இன்னும் 2-3 வருடங்கள் தான் இவரால் ஐபிஎலில் விளையாட முடியும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த இரண்டு வருடங்களாக கோலிக்கு கேப்டன் பதவி காரணமாக அதிக அழுத்தங்கள் இருந்தது. அவருக்கு இந்த வருடம் சிறிய இடைவெளியாக அமையலாம். இருப்பினும் அடுத்த வருடம் ஆர்சிபி அணி கேப்டனாக கோலியை தான் நியமிக்கும். இப்படி தான் என்னுடைய கணிப்பு கூறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.