தமிழக ரேஷன் கடைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி 69 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைகள் மூலமாக 6,82,12,884 நபர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் ஆட்கள் சேர்ப்பதற்கான அறிவிப்புகள் வெளியானது. இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டு முறைகேடுகளில் ஈடுபட்டத்தால் பணி அமர்த்தும் பணி பாதிலேயே விடப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளன. அதன்படி ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு 4000 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது, விற்பனையாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் மூலமாக பணியில் அமர்த்தப்பட உள்ளனர். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்வி தகுதி எட்டாம் வகுப்பு படித்தவர்களாக இருந்தால் மட்டும் போதும். விரைவில் இதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.