Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. நகை கடன் தள்ளுபடி…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

 தமிழகத்தில் ஒரே நாளில் பொது கடன் தள்ளுபடி செய்ய ரூ.1000 கோடி விடுவிப்பு செய்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.  

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றிருந்தால், இந்த கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், கடன் பெற்றதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு தெரியவந்தது.

எனவே தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் இந்த கடனை தள்ளுபடி செய்யலாம்  என அறிவித்திருந்தது. இதை அடுத்து தகுதி வாய்ந்தவர்கள் பட்டியலானது எடுக்கப்பட்டது. இதில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கான நகை எப்போது கைக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி பேசியுள்ளதாவது,

தமிழகத்தில் ஒரே நாளில் பொது கடன் தள்ளுபடி செய்ய ரூ.1000 கோடி விடுவிப்பு செய்திருப்பதாகவும் மற்றும் நகை கடன் ரசீது இம்மாதம் 28ஆம் தேதி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். சட்டபேரவையில் 2022-2023-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரை வழங்கபட்ட நிலையில், நேரம் இல்லா நேரத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பொது கடன் தள்ளுபடிக்கான தொகையானது, ஒரே நாளில் ரூ.1,000 கோடி  விடுவிப்பு செய்து மக்களுக்கு சேவை செய்திருப்பதாகவும், மேலும் கடந்த மூன்று நாளில் 5 லட்சத்து 48 ஆயிரம் பொது மக்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதுகளை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வருகிற 31ஆம் தேதிக்குள் மீதமுள்ளவர்களுக்கு ரசீதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வருகிற 28ஆம் தேதியே அனைவருக்கும் ரசீதுகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |