நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வேன் வைத்து காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேனில் இருந்த மோட்டரில் திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் நடுரோட்டில் வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்ததும் அருண்குமார் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.