மாவட்ட ஆட்சியர் தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா வருவாய் தாசில்தார் அலுவலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் தனித்துணை ஆட்சியர் சரவணன், தாசில்தார் கிருஷ்ணராஜ், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையம் ஆகியவற்றில் பதிவேடுகளை சரியாக பராமரிக்கபடுகிறதா? என ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து 10 பயனாளர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.