Categories
சினிமா

“இதை பண்ணுவதற்காக கௌரவ பிச்சை கூட எடுப்போம்”… பேட்டியில் கூறிய விஷால்…!!!

கௌரவ பிச்சை எடுத்தாவது நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவோம் என விஷால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

சென்ற வருடம் 2019 நடிகர் சங்க தேர்தல் தரப்பட்டு அதில் பதிவான வாக்குகளை என்ன தடை விதிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பாக வாக்குகள் எண்ணப்பட்டு நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றியை பெற்றிருக்கின்றது. இதைத்தொடர்ந்து நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விஷால் கூறியுள்ளதாவது, சென்னைக்கு வரும் மக்கள் சுற்றுலா தலங்களை பார்வையிடுவது போல நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்வை இடும் அளவிற்கு நாங்கள் நடிகர் சங்கத்தின் கட்டுவதற்காக எங்களுக்கு மேலும் 20 கோடி தேவைப்படுகிறது.

இதற்காக நாங்கள் கௌரவ பிச்சை எடுத்தாவது பணியை முடிப்போம் என இவர் பேசியதை தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசியபோது கூறியுள்ளதாவது, “கோவில் கட்ட எப்படி அனைவரும் ஒன்று சேர வேண்டுமோ அது போல அனைவரும் ஒன்று சேர்த்து தான் இந்த நடிகர் சங்கத்தை கட்ட முடியும்” என கூறியுள்ளார். மேலும் ரஜினி கமல் போன்ற நடிகர்களிடம் நிதி திரட்ட உள்ளதாக கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |