இந்திய குடிமக்களுக்கு அத்தியாவசிய ஒரு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு இருக்கிறது. அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கும், பல ஆவணங்களைப் பெறுவதற்கும், ஆவணங்களுக்கு மாற்றாகவும் ஆதார் கார்டு பயன்படுகிறது. இந்த அட்டையின் மூலம் ஒருவர் பெயரை மற்றொருவர் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படும். இதன் காரணமாக அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளர்களுக்குச் சென்று சேர்வது உறுதிப்படுத்தப்படுவதுடன், உரிய பயனாளர்களை எளிதில் அடையாளம் காணவும் முடிகிறது. இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தால் கொடுக்கப்படும் ஆதார்கார்டு 12 இலக்க எண்களை உடையது.
மேலும் குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யக்கூடிய ஆதார் கார்டு ஒருவரின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். இந்த ஆதார் அட்டையில் ஒரு தனிநபரின் பல்வேறு விபரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த விவரங்கள் அனைத்துமே மிகச்சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதில் ஒரு நபரின் பெயர், வயது, முகவரி,போட்டோ, செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
ஆதார் அட்டையிலுள்ள விபரங்கள் தவறாக இருந்தால் அதனை மாற்ற அரசு இ-சேவை மையங்களுக்கு நேரில் சென்றோ (அல்லது) உரிய ஆவணங்களை இணைத்து இணையதளம் வாயிலாகவோ திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் பிற விபரங்கள் சரியாக இல்லையென்றாலும், ஒருநபர் தன் ஆதார் அட்டையிலுள்ள செல்லிடப்பேசி எண் சரியாக இருப்பது கட்டாயம் ஆகும். ஆகவே அனைவரும் ஆதார் அட்டையிலுள்ள செல்லிடப்பேசிஎண் சரியாக உள்ளதா என்பதனை சரிபார்த்து கொள்ளவேண்டும் என்று ஆதார் அமைப்பானது வலியுறுத்துகிறது.