ருசியான மற்றும் ஆரோக்யமான ராகி ரவை தோசை…..
தோசை என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் மெலிதாக போட்டு கொடுத்தால் அதிகம் சாப்பிடுவார்கள். அவ்வாறு நீங்கள் செய்து கொடுக்கும் பொழுது அந்த தோசையிலும் சத்தானதை கொடுத்தால் வேண்டாம் என்ற சொல்வார்கள்?
எத்தனையோ தோசை வகைகள் உள்ள நிலையில் நான் இங்கு ஆரோக்கியம் நிறைந்த ராகி ரவை தோசை செய்வது பற்றி பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
- ரவை – 1/2 கப்
- கோதுமை மாவு – 1/2 கப்
- ராகி – 1/2 கப்
- தோசைமாவு – 1/2 கப்
- உப்பு – 1 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் – தோசை சுட தேவையான அளவு
செய்முறை:
முதலில் அனைத்து மாவு வகைகளையும் ஒன்றாக்கி உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்துகொள்ளவும். பின்பு தோசை சுடுவது போலவே நல்லெண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். பின்பு அதனை சாப்பிட பரிமாறவும்.
ராகி தோசையின் நன்மைகள்:
- எலும்பு வலிமை பெரும்
- உடல் பருமனை குறைக்கும்
- கொழுப்பை குறைக்கும்
- ரத்தசோகை வராமல் தடுக்கும்