அற்புதமான ஐந்து பழங்களும். அதன் நன்மைகளும். இயற்கையா கிடைக்கிற எல்லா பழங்களையும்மே தேவையான சத்துக்கள் இருக்கு. அந்த வகையில் குறிப்பிட்ட 5 பழங்களின் நன்மைகளை பார்க்கலாம்.
மாம்பழம்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி மினரல் , கலோரிகள். இதெல்லாம் அதிக அளவில் இருக்கிறது. இதை சாப்பிடுவதினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம் .சருமமும் அழகாக இருக்கும் கண் பார்வையும் தெளிவாக இருக்கம்.
கொய்யாப்பழம்.
கொய்யாப்பழத்தில் அதிக அளவிலான விட்டமின் சி இருக்கிறது . இதனை தினமும் சாப்பிடுவதினால் எலும்புகள் வலுவடைகிறது, மலச்சிக்கல்,ரத்தசோகை போன்ற நோய்களும் குணமாகிறது . புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
பப்பாளி .
பப்பாளி எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம். இதில் அதிக அளவிலான வைட்டமின்ஏ ,நார்ச்சத்துக்கள்,பொட்டாசியம் இதெல்லாம் இருக்குது. இதை சாப்பிடுவதினால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினையும் குணமாகிறது .ரத்தம் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் .சருமமும் பொலிவு பெறும்.
அன்னாசி பழம்
அன்னாசி பழத்தில் அதிக அளவிலான விட்டமின் பி6, டி ஒன் இருக்கு. இதைத்தொடர்ந்து சாப்பிடுவதனால் ரத்த உற்பத்தி அதிகமாகிறது. சைனஸ் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
விளாம்பழம் .
விளாம்பழத்தில் அதிக அளவிலான வைட்டமின் ஏ கால்சியம் இதெல்லாம் இருக்கிறது . இந்த பலத்தோடே வெல்லம் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கை கால் மூட்டு வலி,இளநரை ,கண்கண் பார்வை மங்கலாக தெரிதல் போன்ற பிரச்சினைகள் தீர்ந்துவிடும்