ராணிப்பேட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிபேட்டை மாவட்டம் கலவை பகுதியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் அப்பகுதி அதிமுக பிரமுகர் ஆவார். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சொத்து கேட்டு அதிமுக பிரமுகர் வீட்டின் வெளியே நின்று அவரது அண்ணன் மகன்களான அரிகிருஷ்ணன் அரவிந்த்சாமி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹரிகிருஷ்ணனை வெளியில் வருமாறு இருவரும் கூச்சலிட,
அவர் வெளியே வராததால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டின் மேல் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் முன்பக்க கதவு, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது கலவை காவல் நிலையத்தில் ஹரிதாஸ் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரவிந்த் சாமி ஹரிகிருஷ்ணன் ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.